820 வாக்குச்சீட்டு அலகு, 1200 கட்டுப்பாட்டு கருவி, 300 வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு எந்திரங்கள்


820 வாக்குச்சீட்டு அலகு, 1200 கட்டுப்பாட்டு கருவி, 300 வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு எந்திரங்கள்
x
தினத்தந்தி 25 May 2023 6:45 PM GMT (Updated: 25 May 2023 6:45 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்துக்கு 820 வாக்குச்சீட்டு அலகு, 1200 கட்டுப்பாட்டு கருவி, 300 வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு எந்திரங்களை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.

மயிலாடுதுறை

நாடாளுமன்ற தேர்தலையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்துக்கு 820 வாக்குச்சீட்டு அலகு, 1200 கட்டுப்பாட்டு கருவி, 300 வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு எந்திரங்களை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.

820 வாக்குச்சீட்டு அலகு

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்டத்திற்கென தனியே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சேமிப்புக்கிடங்கு அமைப்பப்பட வேண்டும். இதற்காக புதிதாக கட்டப்பட்டுவரும் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் தனியே இடம் ஒதுக்கீடு செய்யபட்டு கட்டிடம் கட்டுவதற்கான முன்மொழிவுகள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது இந்திய தேர்தல் ஆணையத்தினால் 2024 நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி 820 வாக்குச்சீட்டு அலகு , 1200 கட்டுப்பாட்டு கருவி மற்றும் 300 வாக்குப்பதிவுக்கான ஒப்புகை சீட்டு வழங்கும் எந்திரங்கள் மயிலாடுதுறை மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பு

அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் பெங்களூரு பெல் நிறுவனத்தில் இருந்து பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது. அவற்றை பாதுகாப்புடன் வைத்திட மயிலாடுதுறை சித்தர்காட்டில் அமைந்துள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம், கிடங்கு எண்-9, தற்காலிகமாக தேர்வு செய்யயட்டது. அதனை அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் சேமிப்பு கிடங்கில் வைத்து பாதுகாப்பாக சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்த கிடங்கு 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய போலீசாரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது), நரேந்திரன், வாக்காளர் பதிவு அலுவலர்களும், உதவி கலெக்டர்களுமான யுரேகா, அர்ச்சனா, மயிலாடுதுறை தேர்தல் (தனி) தாசில்தார் விஜயராகவன், தேர்தல் துணை தாசில்தார், மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story