தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 839 வழக்குகள் சமரச தீர்வு


தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 839 வழக்குகள் சமரச தீர்வு
x

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 839 வழக்குகள் சமரச தீர்வு காணப்பட்டன.

புதுக்கோட்டை

மக்கள் நீதிமன்றம்

புதுக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான பூரண ஜெய ஆனந்த் வழிகாட்டுதல் படி நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட குடும்ப நல நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி, கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி வசந்தி, அத்தியாவசிய பண்டங்கள் சிறப்பு மாவட்ட நீதிபதி பாபுலால், மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான ராஜேந்திர கண்ணன், முதன்மை சார்பு நீதிபதி சசிக்குமார், நீதித்துறை நடுவர் எண்-1 நீதிபதி ஜெயந்தி, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா, ஓய்வு பெற்ற சார்பு நீதிபதி பிச்சை ஆகிய நீதிபதிகள் கொண்ட 7 அமர்வுகள் நடைபெற்றன.

839 வழக்குகள் சமரச தீர்வு

இதேபோல் தாலுகா நீதிமன்றங்களில் தலா ஒரு அமர்வு என மொத்தம் 14 அமர்வுகளில் நீதிமன்ற நிலுவையில் உள்ள வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், உரிமையியல் வழக்குகள், காசோலை மோசடி மற்றும் வங்கி வராக்கடன் வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 2 ஆயிரத்து 483 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு 839 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டன. மேலும் உரியவர்களுக்கு ரூ.9 கோடியே 3 லட்சத்து 52 ஆயிரத்து 501 தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில், மாநில சட்டப்பணி குழுவின் கவுன்சிலின் உறுப்பினர் ரெங்கராஜ் முன்னிலை வகித்தார். மக்கள் நீதிமன்றத்தில் 1,819 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 185 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மேலும் உரியவர்களுக்கு ரூ.67 லட்சத்து 12 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.


Next Story