பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் ரூ.9½ லட்சம் உண்டியல் காணிக்கை

பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் ரூ.9½ லட்சம் உண்டியல் காணிக்கை
x

பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் ரூ.9½ லட்சம் உண்டியல் காணிக்கை

ஈரோடு

கடத்தூர்

கோபி அருகே உள்ள பிரசித்திபெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக 10 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை திறந்து காணிக்கையை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. 10 உண்டியல்களிலும் சேர்த்து 9 லட்சத்து 53 ஆயிரத்து 495 ரூபாய் இருந்தது. மேலும் 85 கிராம் தங்கம், 73 கிராம் வெள்ளி மற்றும் 500 ரியால் சவுதி அரேபியா நோட்டும் செலுத்தப்பட்டு இருந்தது.

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் உதவி ஆணையர் மு.ரமணி காந்தன், கோவில் செயல் அலுவலர் ரத்தினாம்பாள், ஆய்வாளர் சசிகுமார் ஆகியோர் முன்னிலையில் பி.கே.ஆர்.மகளிர் கல்லூரி மாணவிகள், கம்பன் மேல்நிலைப் பள்ளிக்கூட மாணவர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

Next Story