பொது இடங்களில் புகைபிடித்த 9 பேருக்கு அபராதம்
பொது இடங்களில் புகைபிடித்த 9 பேருக்கு அபராதம்
கோயம்புத்தூர்
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் வட்டார சுகாதாரத்துறையினர் பஸ் நிலையம், ஆஸ்பத்திரி, கடை, சந்தை உள்ளிட்ட பொது இடங்களில் புகை பிடிப்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி செலக்கரிச்சலில் புகை பிடிக்க அனுமதித்த 2 கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோன்று சுல்தான்பேட்டை, செலக்கரிச்சலில் பொது இடங்களில் புகை பிடித்த 9 பேருக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்தனர். இதற்கான நடவடிக்கையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகதாஸ், சுகாதார ஆய்வாளர்கள் சந்தோஷ், கார்த்திக், குமார் ஆகியோர் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story