9 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு

வேலூர் மாவட்டத்தில் 9 ஆசிரியர்கள் தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நல்லாசிரியர் விருது
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5-ந் தேதியன்று பள்ளிகளில் சிறப்பாக கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு பெற்றவர்களின் பட்டியலை தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதில், வேலூர் மாவட்டத்தில் 2 தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், 2 நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள், 4 உயர் மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள், ஒரு மெட்ரிக் பள்ளி ஆசிரியர் என்று மொத்தம் 9 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் விவரம் வருமாறு:-
9 ஆசிரியர்கள் தேர்வு
வேலூரை அடுத்த மேல்மொணவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியை பெ.வளர்மதி, குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை ஆ.செல்வி, வேலூர் அம்பேத்கர்நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சு.குமார், புதூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கொ.ஏ.சங்கரன், மேல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் வ.கேசவன், லத்தேரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் க.குணசேகரன், செம்பேடு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சி.சதானந்தம், வேலூர் அலமேலுமங்காபுரம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சு.சாந்தி திருமணி, சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை அ.ஜெயந்தி ஆகியோர் ஆவர்.
இவர்கள் அனைவருக்கும் நாளை (செவ்வாய்கிழமை) சென்னையில் நடைபெறும் விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரொக்கப்பரிசு மற்றும் நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிக்க உள்ளார் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






