பணம் வைத்து சூதாடிய 9 பேர் கைது


பணம் வைத்து சூதாடிய 9 பேர் கைது
x

பணம் வைத்து சூதாடிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே கருப்புடையான்பட்டி கருப்பர் கோவில் அருகே சிலர் பணம் வைத்து சூதாடுவதாக ஆதனக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருணகிரி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த பழைய ஆதனக்கோட்டையை சேர்ந்த குணசேகரன் (வயது 40), தங்கராசு மகன் ரெங்கசாமி (37), சிங்காரம் மகன் சின்னராஜா (39), ரவி மகன் அருண்பாண்டியன் (33), முனியாண்டி மகன் சுதாகர் (35), ஆறுமுகம் மகன் காமராஜ் (35), சின்னத்தம்பி மகன் செந்தில்குமார் (38), குமார் (48), கருப்பையா மகன் தினேஷ்குமார் (31) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.2,700 மற்றும் சீட்டுக்கட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story