புகையிலை பொருட்கள் விற்ற 9 பேர் கைது
புகையிலை பொருட்கள் விற்ற 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும் என போலீசாருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு புகையிலை பொருட்கள் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம் சிதம்பரம் அண்ணாமலை நகர், கடலூர் திருப்பாதிரிப்புலியூர், புதுப்பேட்டை, நெல்லிக்குப்பம், மங்கலம்பேட்டை, புவனகிரி, ராமநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது கடைகளில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்றுக் கொண்டிருந்த சிதம்பரத்தை சேர்ந்த புலவேந்திரன், திருப்பாதிரிப்புலியூர் சிவப்பிரகாசம், பண்ருட்டி ஜெயராமன், விருத்தாசலம் பெரியசாமி, சோழத்தரம் ரகுபதி, புவனகிரி சாவித்ரி, ராஜி, ராமநத்தம் சாந்தி உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.