ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 9 பவுன் நகை அபேஸ்


ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 9 பவுன் நகை அபேஸ்
x

கருங்கல் அருகே ஓடும் பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மூதாட்டியிடம் 9 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

கருங்கல்:

கருங்கல் அருகே ஓடும் பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மூதாட்டியிடம் 9 பவுன் நகையை அபேஸ் செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

மூதாட்டி

கருங்கல் அருகே உள்ள கருப்பன் குடியிருப்புவிளையைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவருடைய மனைவி லில்லி கிரேஸ் (வயது 75). இவர் சம்பவத்தன்று நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்க்க பஸ்சில் வந்தார்.

அங்கு உறவினரை பார்த்து விட்டு மீண்டும் வீட்டுக்கு செல்வதற்காக நாகர்கோவிலில் இருந்து கருங்கல் செல்லும் பஸ்சில் ஏறினார். பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

9 பவுன் நகை அபேஸ்

இந்தநிலையில் பஸ் கருங்கல் பஸ்நிலையத்துக்கு சென்றது. அப்போது, தான் கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு லில்லி கிரேஸ் அதிர்ச்சி அடைந்தார். பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் நகையை அபேஸ் செய்து விட்டு சென்றது தெரியவந்தது.

பின்னர் இதுகுறித்து லில்லி கிரேஸ் கருங்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 9 பவுன் நகையை மர்ம நபர்கள் அபேஸ் செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story