நகைப்பட்டறையின் பூட்ைட உடைத்து 9 பவுன் நகை- ரூ.50 ஆயிரம் கொள்ளை


நகைப்பட்டறையின் பூட்ைட உடைத்து 9 பவுன் நகை- ரூ.50 ஆயிரம் கொள்ளை
x

திருச்சியில் நகைப்பட்டறையின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது. மற்றொரு சம்பவத்தில் அம்மன் தாலி திருட்டு போனது.

திருச்சி


திருச்சியில் நகைப்பட்டறையின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது. மற்றொரு சம்பவத்தில் அம்மன் தாலி திருட்டு போனது.

நகைப்பட்டறை

திருச்சி பெரிய கடைவீதி, சந்து கடை சவுந்தரபாண்டியன் பிள்ளை தெருவை சேர்ந்தவர் பிரபு என்ற பிரபாகரன். இவர் சுண்ணாம்புக்கார தெருவில் நகைப்பட்டறை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு நகைப்பட்டறையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று காலையில் நகைப்பட்டறை கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை கண்ட அப்பகுதியினர் செல்போன் மூலம் பிரபாகரனுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து பிரபாகரன் கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். அப்போது, நகைப்பட்டறையின் பணப்பெட்டியில் இருந்த ரூ.50 ஆயிரம், தங்கநகை, தங்கத்தூள் என 9 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. நள்ளிரவில் யாரோ மர்ம ஆசாமிகள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே கொள்ளை நடந்த நகைப்பட்டறைக்கு மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் விரைந்து சென்று தடயங்களை சேகரித்துக்ெகாண்டனர். இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் இது போன்று நகைப்பட்டறையில் கொள்ளை நடந்தது. இந்த கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை புகார்வந்த 4 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, மீண்டும் ஒரு கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அம்மன் தாலி திருட்டு

இதே போல மேல சாயக்காரத்தெருவில் ஸ்ரீசக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் இரும்பு கதவை நெம்பி அம்மன் கழுத்தில் இருந்த சுமார் 2 பவுன் தாலியை மர்மநபர்கள் திருடி சென்றுவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக வந்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story