9 துணை சுகாதார நிலையம் அமைக்க இடங்கள் தேர்வு


9 துணை சுகாதார நிலையம் அமைக்க இடங்கள் தேர்வு
x

திருப்பத்தூர் நகராட்சி பகுதியில் 9 துணை சுகாதார நிலையம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் நகராட்சி பகுதியில் 9 துணை சுகாதார நிலையம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நகராட்சி கூட்டம்

திருப்பத்தூர் நகராட்சி கூட்டம் நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா வரவேற்றார். நகர மன்ற துணைத் தலைவர் சபியுல்லா முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் வருமாறு:

தலைவர் சங்கீதா வெங்கடேஷ்: நகராட்சி கூட்டத்தில் நகர மன்ற அனைத்து உறுப்பினர்களின் கோரிக்கைகளை ஏற்று பல்வேறு நல திட்ட பணிகள் மற்றும் திருப்பத்தூர் நகராட்சி முதன்மையாக வர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துணைத்தலைவர் சபியுல்லா: தலைவர் கொண்டுவந்த தீர்மானத்தால் திருப்பத்தூர் நகராட்சி முதல் தேர்வு நிலை நகராட்சியாக உயர்த்தப்பட்டது. திருப்பத்தூர் நகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டு தற்போதைய திருப்பத்தூர் கிராம பஞ்சாயத்து இணைக்கப்பட்ட பின் நகராட்சி மொத்த பரப்பளவு 9.79 சதுர கிலோமீட்டர் ஆகும்.

ஒப்படைக்க வேண்டும்

தற்போது திருப்பத்தூர் நகர எல்லைக்கு மட்டுமே சர்வே எண்கள் திருப்பத்தூர் நகர அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. திருப்பத்தூர் கிராம பஞ்சாயத்தில் இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு உள்ளடக்கிய சர்வே எண்கள் நகராட்சி வசம் ஒப்படைப்பு செய்யப்படாமல் கிராம நிர்வாக அலுவலகம் மூலம் பராமரிப்பில் உள்ளது. கிராம பஞ்சாயத்து பகுதி நகராட்சியுடன் இணைந்து 10 வருடங்களுக்கு மேலாகிறது. ஆனால் இன்னும் கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. எனவே சர்வே எண்கள் கொண்ட ஆவணங்களை நகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும்.

கலெக்டர் மற்றும் தாசில்தாருக்கு கடிதம் அனுப்பவும், ஆவணங்களை நகராட்சியில் ஒப்படைப்பு செய்து, கிராம பஞ்சாயத்து சர்வே எண்கள் அனைத்தையும் கணக்கீடு செய்து நகர சர்வே எண்களாக மாற்றி, உரிய வார்டு பிளாக் மற்றும் நகர அளவு எண் கொண்ட வரைபடத்தை தயார் செய்ய வேண்டும். எனவே உடனடியாக நகராட்சி வசம் சர்வே எண்களை ஒப்படைக்க நகராட்சி மூலம் நகராட்சி நிர்வாக இயக்குனர் வழியாக அரசுக்கு பரிந்துரை செய்ய மன்றம் தீர்மானிக்கிறது.

துணை சுகாதார நிலையங்கள்

திருப்பத்தூர் நகராட்சி பகுதிகளில் அவாய் தெரு, திருமால் நகர், சிவராஜ் பேட்டை, சிவசக்தி நகர் அன்னை நகர், பீர்பால் நன்மையா தெரு, ஹாரிப் நகர், வள்ளுவர் நகர் ஆகிய இடங்களில் 9 புதிய துணை சுகாதார நிலையங்கள் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. புதிய துணை சுகாதார நிலையங்கள் கட்டப்பட்டு பொதுமக்களுக்கு மருத்துவ சேவை வழங்கப்படும்.

பிரேம்குமார் (தி.மு.க.): 17-வது வார்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ரேஷன் கடை, அங்கன்வாடி கட்டிடம் கட்ட இடம் ஒதுக்கி தந்த நகராட்சி தலைவர் மற்றும் ஆணையாளர்களுக்கு 17 வது வார்டு பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு விவாதம் நடந்தது.


Next Story