கேட்பாரின்றி நிறுத்தப்பட்ட 9 வாகனங்கள் பறிமுதல்


கேட்பாரின்றி நிறுத்தப்பட்ட 9 வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 18 Jan 2023 2:08 AM IST (Updated: 18 Jan 2023 12:44 PM IST)
t-max-icont-min-icon

கேட்பாரின்றி நிறுத்தப்பட்ட 9 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்சி

திருச்சி தஞ்சாவூர் மெயின்ரோடு பால்பண்ணை அருகே கேட்பாரின்றி இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாஞ்சில்குமார் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்று, அங்கு நிறுத்தப்பட்டிருந்த 7 இருசக்கர வாகனங்களை கைப்பற்றினர்.

இதேபோல் பாலக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் உள்ள சுடுகாடு அருகே கேட்பாரின்றி நிறுத்தப்பட்டிருந்த 2 இருசக்கர வாகனங்களை கைப்பற்றினர். அவற்றின் உரிமையாளர்கள் யார்? எதற்காக அவற்றை அங்கு நிறுத்தி சென்றனர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story