90 சென்ட் கோவில் நிலம் மீட்பு


90 சென்ட் கோவில் நிலம் மீட்பு
x

அறநிலையத்துறைக்கு சொந்தமான 90 சென்ட் கோவில் நிலம் மீட்கப்பட்டது.

நீலகிரி

ஊட்டி

ஊட்டி காந்தல் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் மூவுலகரசி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான 90 சென்ட் நிலத்தை குத்தகைக்கு எடுத்தவர்கள், அதற்கான பணத்தை கோவிலுக்கு செலுத்தாமல் இருந்து வந்தனர். இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் படி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று கோவை மண்டல உதவி ஆணையாளர் கருணாநிதி, ஊட்டி மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் சங்கீதா, அறநிலைய துறை ஆய்வாளர் ஹேமலதா ஆகியோர் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் மூவுலகரசி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 90 சென்ட் நிலத்தை மீட்டனர். அங்கு இந்த நிலம் கோவிலுக்கு சொந்தமானது என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.


Next Story