செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான 90% பணிகள் நிறைவு - அமைச்சர் மெய்யநாதன் தகவல்


செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான 90% பணிகள் நிறைவு - அமைச்சர் மெய்யநாதன் தகவல்
x

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குவதற்கு 4 நாட்களுக்கு முன்னதாக அனைத்து பணிகளும் நிறைவு பெறும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் உள்ள போர்பாயிண்ட்ஸ் ஷெரட்டன் நட்சத்திர விடுதியில் வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இந்தியா, நார்வே, பிரான்ஸ், ஜெர்மனி, அர்ஜென்டினா, ஸ்பெயின் உள்பட 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு வெகு விமரிசையாக மேற்கொண்டு வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக அமைக்கப்பட்டுள்ள நவீன அரங்கம், விளையாட்டு வீரர்களுக்கு செய்யப்பட்டு இருக்கும் அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகளை விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேரில் பார்வையிட்டார்.

இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான 90% பணிகள் நிறைவடைந்ததாக தெரிவித்தார். மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குவதற்கு 4 நாட்களுக்கு முன்னதாக அனைத்து பணிகளும் நிறைவு பெறும் என அவர் கூறினார். இந்த போட்டியில் தமிழகத்தில் இருந்து 7 வீரர்கள் பங்கேற்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story