ஈரோடு மார்க்கெட்டுக்கு 900 டன் காய்கறி விற்பனைக்கு வந்தது


ஈரோடு மார்க்கெட்டுக்கு 900 டன் காய்கறி விற்பனைக்கு வந்தது
x

ஈரோடு மார்க்கெட்டுக்கு 900 டன் காய்கறி விற்பனைக்கு வந்தது

ஈரோடு

ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. தாளவாடி, தாராபுரம், ஒட்டன்சத்திரம் கிருஷ்ணகிரி, பொள்ளாச்சி, திருப்பூர், பெங்களூரு, ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து நேற்று 900 டன் காய்கறி விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. இதேபோல் 8 ஆயிரம் பெட்டி தக்காளி விற்பனைக்கு வந்தது.

தற்போது புரட்டாசி மாதம் தொடங்கி விட்டதால் அசைவ பிரியர்கள் பலர் தற்போது சைவத்துக்கு மாறி விட்டனர். இதேபோல் தொடர் விசேஷங்கள், முகூர்த்த நாட்களும் வருகிறது. இதனால் தற்போது காய்கறியின் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக காய்கறியின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை உயர்ந்துள்ளது. எனினும் பொதுமக்கள் ஆர்வமுடன் காய்கறியை வாங்கி சென்றனர்.

ஈரோடு மார்க்கெட்டில் நேற்று விற்பனையான காய்கறியின் விலை கிலோவில் வருமாறு:-

கத்தரிக்காய் -ரூ.60, வெண்டைக்காய் -ரூ.20, பீர்க்கங்காய் -ரூ.70, பாகற்காய் -ரூ.40, முள்ளங்கி -ரூ.50, முருங்கைக்காய் -ரூ.50, பச்சை மிளகாய் -ரூ.40, சின்ன வெங்காயம் -ரூ.60, பெரிய வெங்காயம் -ரூ.35, கொத்தவரங்காய் -ரூ.40, அவரைக்காய் -ரூ.100, முட்டைகோஸ் -ரூ.20, காலிபிளவர் -ரூ.40, காளான் -ரூ.60, கேரட்-ரூ.60, பீட்ரூட்- ரூ.70, பீன்ஸ் -ரூ.90, உருளைக்கிழங்கு -ரூ.40, பழைய இஞ்சி -ரூ.290, புதிய இஞ்சி -ரூ.120, தக்காளி -ரூ.15.


Next Story