பிளஸ்-2 பொதுத்தேர்வில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் 90.82 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி


பிளஸ்-2 பொதுத்தேர்வில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் 90.82 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி
x

பிளஸ்-2 பொதுத்தேர்வில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் 90.82 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர். மா.ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பள்ளிக்கல்வித்துறை சார்பில் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றது. இதில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக 6,429 மாணவர்களும், 6,712 மாணவிகளும் என மொத்தம் 13,141 மாணவ, மாணவிகள் அரசுத்தேர்வில் கலந்து கொண்டனர்.

இதில் பொதுப் பாடத் தேர்வில் 12,661 மாணவ, மாணவிகளும், தொழில் பாடப் பிரிவில் 480 மாணவ, மாணவிகளும் தேர்வு எழுதினார்கள்.

இதில் 11,935 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். சராசரியாக 90.82 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மாணவர்கள் 86.50 சதவீதமும், மாணவிகள் 94.96 தேர்ச்சி சதவீதமும் பெற்றுள்ளனர். மாணவிகள், மாணவர்களை விட 8.46 சதவீதம் கூடுதலாக பெற்றுள்ளனர்.

அரசுப் பள்ளிகளின் சராசரி தேர்ச்சி சதவீதம் 86.46 சதவீதம் ஆகும். மாநில அளவில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தின் அடிப்படையில், காஞ்சீபுரம் மாவட்டம் 31-வது தர வரிசையினை பெற்றுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story