சிறப்பு மருத்துவ முகாமில் 9,104 பேருக்கு சிகிச்சை


சிறப்பு மருத்துவ முகாமில் 9,104 பேருக்கு சிகிச்சை
x
தினத்தந்தி 25 Jun 2023 2:30 AM IST (Updated: 25 Jun 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டத்தில் 6 இடங்களில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் 9,104 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக சுகதார துறையினர் தெரிவித்தனர்.

கோயம்புத்தூர்


முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா வை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நேற்று கோவை தோலம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, கணுவாய் அரசு நடுநிலைப்பள்ளி, சமத்தூர் ராமஅய்யங் கார் மேல்நிலைப்பள்ளி, வடவள்ளி மருதமலை சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான பள்ளி, குனியமுத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 6 இடங்களில் நடைபெற்றது.

மருதமலை சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான பள்ளியில் நடை பெற்ற முகாமை கலெக்டர் கிராந்தி குமார் தொடங்கி வைத்தார். இதில் மேயர் கல்பனா ஆனந்தகுமார், ஆணையாளர் பிரதாப் உள்பட பலர் கலந்து கொண்டனர். தாய்-சேய் நலப் பெட்டகங் களை பயனாளிகளுக்கு கலெக்டர் கிராந்தி குமார் வழங்கினார்.

முகாமில் ரத்த அழுத்தம், சிறுநீர், எக்கோ மற்றும் இ.சி.ஜி., பெண்களுக்கு மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உள்ளிட்ட பரிசோதனை நடைபெற்றது. மேலும் பொது அறுவை சிகிச்சை, மகளிர், மகப்பேறு, கண், காது, மூக்கு தொண்டை, பல், மன நல மருத்துவம் உள்ளிட்ட பன்னோக்கு ஆலோசனைகள் சிறப்பு மருத்துவர்களால் அளிக்கப்பட்டது.

6 இடங்களில் நடைபெற்ற முகாமில் 3,878 ஆண்கள், 5,091 பெண்கள், 6 திருநங்கைகள், 129 குழந்தைகள் என மொத்தம் 9,104 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக சுகதார துறையினர் தெரிவித்தனர்.


Next Story