கடலூர் மாவட்டத்தில் இருந்து மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டிக்கு 95 பேர் தேர்வு


கடலூர் மாவட்டத்தில் இருந்து    மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டிக்கு 95 பேர் தேர்வு
x
தினத்தந்தி 19 Sep 2023 6:45 PM GMT (Updated: 19 Sep 2023 6:47 PM GMT)

கடலூர் மாவட்டத்தில் இருந்து மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டிக்கு 95 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

கடலூர்

கடலூர் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் சாா்பில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி மற்றும் மாநில போட்டிக்கு தகுதி தேர்வு கடலூரில் நடைபெற்றது.

இதில் 5 முதல் 7 வயதுக்கு உட்பட்டவர்கள், 7 முதல் முதல் 9 வயதுக்கு உட்பட்டவர்கள், 9 முதல் 11 வயதுக்குள், 11 முதல் 14 வயதுக்குள், 14 முதல் 17 வயதுக்குள் உட்பட்டவர்கள் மற்றும் 17 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆகிய பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றது.

இதில் இன்லைன் பயிற்சி பெற்றவர்களுக்கு ஆண்கள், பெண்கள் என்று தனித்தனியாக 13 பிரிவின் கீழ் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதன் தொடக்க விழாவில் கலெக்டர் அருண்தம்புராஜ், மாநகராட்சி ஆணையர் காந்திராஜ் ஆகியோர் கலந்து கொண்டு, போட்டியை தொடங்கி வைத்தார்கள். விழாவுக்கு ஜலபதி முன்னிலை வகித்தார்.

போட்டியில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 2 நாட்கள் நடந்த போட்டி முடிவில், பல்வேறு பிரிவுகளில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும், சென்னையில் மாநில அளவில் நடைபெற இருக்கிற போட்டியில் பங்கேற்க 95 பேர் தகுதி பெற்றனர். இவர்களில் இன்லைன் ஆக்கி வீரர்கள் 25 பேரும் அடங்குவார்கள். முடிவில் தர்மா தணிகைமேல் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை கடலூர் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேசன் மாவட்ட பொதுச்செயலாளர் நடராஜன் செய்திருந்தார்.

---

குறிப்பு:-

3 காலம் படம்


Next Story