95.19 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி


95.19 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி
x

பிளஸ்-1 தேர்வில் மாணவ-மாணவிகள் 95.19 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.

விருதுநகர்


பிளஸ்-1 தேர்வில் மாணவ-மாணவிகள் 95.19 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.

பிளஸ்-1 தேர்வு முடிவுகள்

விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வு முடிவுகளை நேற்று தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் 10,073 மாணவர்களும், 11,721 மாணவிகளும் ஆக மொத்தம் 21,794 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.

இதில் 9,301 மாணவர்களும், 11,444 மாணவிகளும் ஆக மொத்தம் 20,745 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி சதவீதம்

மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 92.34 ஆகும். மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 97.64 ஆகும். சராசரி தேர்ச்சி சதவீதம் 95.79 ஆகும். கடந்த ஆண்டு நடைபெற்ற பிளஸ்-1 தேர்வில் 95.44 சதவீதம் தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் 3-வது இடம் பிடித்தது. இந்த ஆண்டு 95.19 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 6-வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story