கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணி நிறைவு: பழங்கால பொருட்களை ஆவணப்படுத்தும் பணி நடைபெறும்


கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணி நிறைவு: பழங்கால பொருட்களை ஆவணப்படுத்தும் பணி நடைபெறும்
x

கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணி நேற்றுடன் நிறைவு பெற்றது.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் கீழடியில் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் ஏற்கனவே 8 கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடைபெற்றன.

9-ம் கட்ட அகழாய்வு ஏப்ரல் மாதம் தொடங்கி நடந்தது. மொத்தம் 14 குழிகள் கீழடியில் தோண்டப்பட்டன.

கருப்பு, சிவப்பு ஓடுகள், பானைகள், விலங்கு உருவ பொம்மைகள், பாம்பு உருவ சுடுமண் பொம்மை, படிகத்தால் செய்யப்பட்ட எடைக்கல், தங்க ஆபரணங்கள், சில்லு வட்டுக்கள், கண்ணாடி பாசிமணிகள், தாயக்கட்டைகள் உள்பட 700-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

9-ம் கட்ட அகழாய்வு பணிக்கு அரசு செப்டம்பர் 30-ந் தேதி வரைதான் அனுமதி அளித்து இருந்தது. அதன் பிறகு மழைக்காலம் தொடங்கி விடும் என்பதால், ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதத்துடன் இப்பணிகள் முடிவடையும். அதன்படி நேற்றுடன் 9-ம் கட்ட அகழாய்வு பணி நிறைவு பெற்றது. கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால பொருட்களை ஆவணப்படுத்தும் பணி மட்டும் தொடர்ந்து நடைபெறும்.


Next Story