கீரனூர் அருகே கருப்பர் கோவிலுக்கு 12 அடியில் பிரம்மாண்ட அரிவாள்...!
கீரனூர் அருகே உள்ள கருப்பர் கோவிலுக்கு 12 அடியில் பிரம்மாண்டமான அரிவாள் செய்யப்பட்டுள்ளது.
கீரனூர்,
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதிகளில் ஆடி மாதத்தை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் விசேஷ பூஜைகள், நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் கீரனூர் பகுதியில் கோவில்களுக்கு தேவையான வேல் கம்புகள், அரிவாள் போன்றவை செய்து கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கொட்டப்பட்டு கருப்பர் கோவிலுக்காக 60 கிலோ 12 அடி உயரம் உள்ள பிரம்மாண்டமான அரிவாள் செய்யப்பட்டுள்ளது. இதனை கீரனூரைச் சேர்ந்த நாடிமுத்து ஆசாரி என்பவர் செய்துள்ளார்.
Related Tags :
Next Story