12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது


12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது
x

ஒடுகத்தூர் அருகே 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.

வேலூர்

ஒடுகத்தூரை அடுத்த எல்லப்பன்பட்டி கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குபுறமாக ஒரு பாழடைந்த வீடு உள்ளது. இந்த வீட்டின் அருகே நேற்று முன்தினம் இரவு சுமார் 12 மணியளவில் 12 அடி நீள மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது. இதனை பார்த்த இளைஞர்கள் உடனே அதனை பிடித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

நள்ளிரவு என்பதால் பாம்பை எடுத்து வரும்படி வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் பாம்பை சாக்கு மூட்டையில் எடுத்துக்கொண்டு 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மராட்டியபாளையம் கிராமத்திற்கு சென்றுள்ளனர். அங்கு வந்த வனத்துறையினரிடம் பாம்பை ஒப்படைத்தனர்.

தொடர்ந்து பிடிபட்ட மலைப்பாம்பை அருகே உள்ள காப்பு காட்டில் பத்திரமாக விட்டனர்.


Next Story