12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது
ஒடுகத்தூர் அருகே 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.
வேலூர்
ஒடுகத்தூர் அடுத்த மராட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் தனக்கு சொந்தமான பப்பாளி தோட்டத்தில் நேற்று தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தார். அப்போது பப்பாளி செடிக்கு நடுவே சுமார் 12 அடி நீள மலைப் பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது. இதைப் பார்த்த வெங்கடேசன் அலறியடித்து ஓட்டம் பிடித்தார். பின்னர் இதுகுறித்து கிராம மக்களுக்கும், ஒடுகத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் தீயணைப்பு வீரர் செல்வகுமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மலைப் பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர் அதை அவர்கள் வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.
Related Tags :
Next Story