சாலையின் குறுக்கே படுத்திருந்த 12 அடி நீள மலைப்பாம்பால் பரபரப்பு
வாணியம்பாடி அருகே சாலையின் குறுக்கே படுத்திருந்த 12 அடி நீள மலைப்பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர்
வாணியம்பாடியை அடுத்த கணவாய்புதூர் கிராமத்திற்கு செல்லும் ரோட்டில் சுமார் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று படுத்திருந்தது. அப்பகுதியில் தெரு விளக்கு இல்லாததால் மலைப்பாம்பு இருப்பதை யாரும் கவனிக்காமல் அதை கடந்து சென்று வந்துள்ளனர். இந்தநிலையில் அந்தவழியாக டார்ச் லைட்டுடன் நடந்து சென்ற ஒருவர் அங்கு மலைப்பாம்பு இருப்பதை கண்டு கூச்சலிட்டவாரு ஓட்டம் பிடித்துள்ளார்.
இதனால் அங்கு பொதுமக்கள் திரண்டுள்ளனர். உடனே அங்குள்ள கனகராஜ் என்பவரின் வீட்டுக்குள் பாம்பு நுழைய முயன்றுள்ளது. இதனைக் கண்ட பொதுமக்கள் பாம்பு பிடிக்கும் நபருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர். அதன்பேரில் அங்கு வந்த இலியாஸ் என்பவர் நீண்ட நேரம் போராடி மலைப்பாம்பை லாவகமாக பிடித்து சென்று மலைப்பகுதியில் விட்டார். மலைப்பாம்பு சாலையின் குறுக்கே படுத்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story