16 வயது சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல்

16 வயது சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல்
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரி பிரிவு சிந்து நகரில் 16 வயது சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து அவன், பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அந்த சிறுவனின் வீடு அமைந்துள்ள இடங்களை சுற்றிய பகுதிகளில் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அருணா, மாவட்ட மலேரியா அலுவலர் கல்விக்கரசன் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் வட்டார சுகாதாரத்துறையினரால் கொசு ஒழிப்பு பணி நடந்தது. குறிப்பாக பழைய டயர்கள், பிளாஸ்டிக் பொருட்களை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர்.
முன்னதாக கொசு மருந்து அடித்தல் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி பரிசோதனை செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதனை வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் வனிதா ஆய்வு செய்தார்.






