மறைமலைநகர் அருகே குளத்தை தூர்வாரும் போது 2 அடி உயர கிருஷ்ணர் சிலை கண்டெடுப்பு


மறைமலைநகர் அருகே குளத்தை தூர்வாரும் போது 2 அடி உயர கிருஷ்ணர் சிலை கண்டெடுப்பு
x

மறைமலைநகர் அருகே குளத்தை தூர்வாரும் போது 2 அடி உயர கிருஷ்ணர் சிலை கிடைத்தது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட சின்ன செங்குன்றம் பகுதியில் உள்ள குளம் நகராட்சி சார்பில் ரூ.30 லட்சம் செலவில் தூர் வாரும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பொக்லைன் ஏந்திரம் மூலம் குளத்தை தூர் வாரும்போது குளத்திற்குள் புதைந்திருந்த 2 அடி உயரம் கொண்ட கிருஷ்ணர் கற்சிலை கிடைத்தது. தகவல் அறிந்த சின்ன செங்குன்றம் கிராம மக்கள் குளத்திற்கு நேரில் சென்று கிருஷ்ணர் சிலைக்கு பூஜை செய்து வணங்கினர்.

தகவல் அறிந்த மறைமலைநகர் நகர மன்ற தலைவர் ஜெ.சண்முகம், நகராட்சி என்ஜினீயர் வெங்கடேசன், கிராம நிர்வாக அலுவலர், மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூர் வரும்போது கிடைத்த கிருஷ்ணர் கற்சிலையை நேரில் பார்வையிட்டனர். தொல்லியல் துறையினர் ஆய்வுக்கு பின்னரே அந்த சிலை பழங்கால சிலையா? என்பது தெரியவரும்.


Next Story