வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு


வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு
x

வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறிக்கப்பட்டது.

திருச்சி

சோமரசம்பேட்டை:

சங்கிலி பறிப்பு

இனாம்குளத்தூர் அருகே உள்ள பூலாங்குளத்துபட்டி களத்து வீடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். கொத்தனார். இவரது மனைவி அடைக்கலமேரி (வயது 44). இவர்கள் நேற்று முன்தினம் இரவு காற்றுக்காக வீட்டின் முன்கதவை திறந்து வைத்துவிட்டு வீட்டிற்குள் தூங்கிக்கொண்டிருந்தனர்.

நேற்று அதிகாலை 2 மணியளவில் அந்த வீட்டிற்குள் நுழைந்த 2 மர்ம நபர்கள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த அடைக்கலமேரியின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு, பின்வாசல் வழியாக தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து அடைக்கலமேரி இனாம்குளத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கஞ்சா விற்றவர்கள் கைது

* திருச்சி உறையூர் நவாப் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள் சக்திரூபிணி(17). இவர் ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற அவர், பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* திருச்சி காஜாபேட்டை மெயின்ரோடு பகுதியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது தாராநல்லூர் பகுதியை சேர்ந்த தேவா (29), படையப்பா ஆகியோர் கஞ்சா விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

* திருச்சி முதலியார் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் அருள் (31). இவர் பெல்ஸ் மைதானத்தில் லாட்டரி விற்றதாக பாலக்கரை போலீசார் அவரை கைது செய்தனர்.

மொபட் திருடியவர் கைது

*சோமரசம்பேட்டை அடுத்துள்ள அல்லித்துறை மேலத்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியனின் மகன் சோமசுந்தரம்(24). இவரது மொபட் திருட்டு போனது குறித்து சோமரசம்பேட்டை போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டபோது, சோமரசம்பேட்டைக்கு அருகே சந்தேகப்படும்படியாக நின்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் அல்லித்துறை மேலத்தெருவை சேர்ந்த மனோகரின் மகன் கார்த்திகேயன்(19) என்பதும், திருப்பூரில் ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும், 2 மாதத்திற்கு ஒரு முறை விடுமுறை எடுத்து வந்து இருசக்கர வாகனங்களை திருடி விற்றதும் தெரியவந்தது. மேலும் இவர் மீது 7-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன திருட்டு வழக்குகள் உள்ளன. சோமசுந்தரத்தின் ெமாபட்டை திருடியது அவர்தான் என்பதும் தெரியவந்தது. இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ரியாஸ்கான் வழக்குப்பதிவு செய்து, கார்த்திகேயனை கைது செய்து சிறையில் அடைத்தார்.


Next Story