திண்டுக்கல்: தேள் கடித்து 3 வயது சிறுவன் பலி


திண்டுக்கல்: தேள் கடித்து 3 வயது சிறுவன் பலி
x

வடமதுரை அருகே 3 வயது சிறுவன் தேள் கடித்ததில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள கொம்பேறிபட்டி ஊராட்சி செம்மனாம்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயக்கண்ணன்(வயது 38), விவசாயி. இவரது மனைவி சிவகாமி. இவர்களுக்கு தீபா, மோனிகா என்ற மகள்களும் வெற்றிவேல் (3) என்ற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மாலை தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த வெற்றிவேலின் கையில் தேள் கடித்துள்ளது. வலியால் அலறி துடித்த வெற்றிவேலை அவரது குடும்பத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.

அதன்பின்னர் வெற்றிவேல் வேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அங்கு சிகிச்சையில் இருந்த வெற்றிவேல் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து வெற்றிவேலின் சித்தப்பா சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story