சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 4 பவுன் தங்க சங்கிலி பறிப்பு


சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 4 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
x

கறம்பக்குடியில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு ஹெல்ெமட் அணிந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தங்க சங்கிலி பறிப்பு

புதுக்கோட்டை

தங்க சங்கிலி பறிப்பு

கறம்பக்குடி தெற்கு யாதவர் தெருவை சேர்ந்தவர் காத்தான் மனைவி ராமாமிர்தம் (வயது 63). இவர், இன்று மதியம் கறம்பக்குடி கடைவீதிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். பஸ் நிலையம் அருகே நெய்வேலி விலக்கு சாலையில் நடந்து சென்ற போது பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்ெமட் அணிந்தபடி வந்த மர்மநபர் திடீரென மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்தார். இதில் நிலைதடுமாறிய மூதாட்டி சுதாரித்து சத்தம் போடுவதற்குள் அந்த நபர் மூதாட்டியை தாக்கி கீழே தள்ளி விட்டு சங்கிலியை எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார்.

பரபரப்பு

மூதாட்டியின் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் தங்க சங்கிலியை பறித்த நபரை விரட்டி சென்றும், பிடிக்க முடியவில்லை. அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் நம்பர் பிளேட்டும் இல்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து மூதாட்டி ராமாமிர்தம் கறம்பக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் நடந்து சென்ற மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story