அந்தியூரில் 7 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு பிடிபட்டது
அந்தியூரில் 7 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு பிடிபட்டது
ஈரோடு
அந்தியூர்
அந்தியூர் தவிட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் அய்யப்பன். நெசவு தொழிலாளி. நேற்று வீட்டுக்குள் பாம்பு ஊர்ந்து சென்றதை பார்த்து அய்யப்பன் அதிர்ச்சி அடைந்தார். உடனே அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தாங்கள் கொண்டு வந்த கருவி மூலம் வீட்டுக்குள் பதுங்கி இருந்த பாம்பை பிடித்து லாவகமாக வெளியே கொண்டு வந்தனர். அப்போது அது சுமார் 7 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு என்று தெரிந்தது. அதன்பின்னர் பாம்பை தீயணைப்பு வீரர்கள் ஒரு சாக்குபையில் போட்டு, அந்தியூர் வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
Related Tags :
Next Story