ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை இறந்து பிறந்ததால் பரபரப்பு


ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை இறந்து பிறந்ததால் பரபரப்பு
x

புதுச்சத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை இறந்து பிறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

சிதம்பரம்

சிதம்பரம் அருகே உள்ள புதுச்சத்திரம் அடுத்த தச்சன்பாளையத்தை சேர்ந்தவர் ஆரோக்கியஜெயராஜ் (வயது 34). இவருடைய மனைவி ஜெசி ஜெனிபர் (30). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜெசி ஜெனிபருக்கு, புதுச்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை இறந்த நிலையில் பிறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ஆரோக்கிய ஜெயராஜ், தனது குழந்தை இறப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புதுச்சத்திரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story