காதலியை கொன்றுவிட்டு ரெயில் முன் பாய்ந்த வங்கி ஊழியர்


காதலியை கொன்றுவிட்டு ரெயில் முன் பாய்ந்த வங்கி ஊழியர்
x

காதலியை குத்திக்கொன்று வங்கி ஊழியர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி,

திருச்சி மேலகல்கண்டார்கோட்டையை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் வினோத்குமார் (வயது 36). இவர் தனியார் வங்கியில் கலெக்சன் ஏஜெண்டாக வேலை பார்த்து வந்தார்.

இவருக்கும், இவரது முதல் மனைவிக்கும் விவாகரத்தானது. இதையடுத்து இரண்டாவதாக ஒரு பெண்ணை அவர் திருமணம் செய்தார். ஆனால் தற்போது அவருடனும் விவாகரத்தாகும் நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், மேலகல்கண்டார்கோட்டை பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மனைவி புவனேஸ்வரி (31) என்பவருடன் வினோத்குமாருக்கு கள்ளக்காதல் உண்டானது.

குத்திக்கொலை

நேற்று காலை சீனிவாசன் வெளியே சென்றிருந்த நேரத்தில் புவனேஸ்வரியின் வீட்டிற்கு வினோத்குமார் வந்துள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே திடீரென பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து வினோத்குமார் கையில் வைத்திருந்த கத்தியால் புவனேஸ்வரியின் கழுத்து மற்றும் உடலில் குத்தினார். இதில அவர் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து வினோத்குமார் அங்கிருந்து பழைய மஞ்சத்திடல் ரெயில்வே தண்டவாள பகுதிக்கு சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் முன் பாய்ந்து வினோத்குமார் தற்கொலை செய்து கொண்டார்.


Next Story