குன்னூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்த கரடியால் பரபரப்பு


குன்னூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்த கரடியால் பரபரப்பு
x
தினத்தந்தி 24 Aug 2023 12:30 AM IST (Updated: 24 Aug 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

குன்னூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்த கரடியால் பரபரப்பு

நீலகிரி

குன்னூர்

குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக கரடிகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் குன்னூர் அருகே அருவங்காடு பகுதியில் வெடிமருந்து தொழிற்சாலை வளாகத்திலுள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்குள் ேநற்று முன்தினம் நள்ளிரவில் கரடி புகுந்தது. இந்த கரடி அங்குள்ள கடையை உடைத்து உள்ளே இருந்த பொருட்களை தின்று சேதப்படுத்தியும் உள்ளது.

மேலும் சில பொருட்களை கேட் வளாகத்திற்குள் கொண்டு வந்து வைத்து தின்றதை இரவு நேர காவலர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. பள்ளி வளாகத்தில் புகுந்த கரடியால் பள்ளி மாணவ- மாணவிகள் , பெற்றோர் கள் மற்றும் ஆசிரியர்கள் அச்சமடைந்துள்ளனர். பள்ளிக்குள் வந்த கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story