சாலையில் உலா வந்த காட்டெருமை


சாலையில் உலா வந்த காட்டெருமை
x
தினத்தந்தி 18 Jun 2023 2:45 AM IST (Updated: 18 Jun 2023 2:45 AM IST)
t-max-icont-min-icon

குன்னூர் அருகே சாலையில் உலா வந்த காட்டெருமையால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி

குன்னூர்

குன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டெருமைகள் குடியிருப்பு பகுதிக்குள் சுற்றித்திரிகின்றன. அதனை வனத்துறையினர் விரட்டினாலும், மீண்டும் குடியிருப்பு மற்றும் சாலைகளில் உலா வந்த வண்ணம் உள்ளது.

குன்னூர் அருகே அவாஹில் ராணுவ முகாம் வனப்பகுதியில் காட்டெருமைகள் அதிகமாக உள்ளன. அங்கிருந்து வெளியேறும் காட்டெருமைகள் ஊட்டி-குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரியும் பாய்ஸ் கம்பெனி-உபதலை சாலையில் அடிக்கடி உலா வருகின்றன.

நேற்று வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டெருமை சாலையில் சுற்றித்திரிந்தது. இதனால் நடைபயிற்சி செய்தவர்கள், காலையில் பணிக்கு செல்பவர்கள் அந்த வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சிறிது நேரத்திற்கு பின்னர் காட்டெருமை வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் குடியிருப்பு, சாலையில் உலா வரும் காட்டெருமையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story