குன்னூர்-ஊட்டி ரெயில் பாதையில் காட்டெருமைகள் உலா-மலை ரெயில் நடுவழியில் நிறுத்தம்
குன்னூர்-ஊட்டி ரெயில் பாதையில் காட்டெருமைகள் உலா வந்ததால் மலை ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
குன்னூர்
குன்னூர்-ஊட்டி ரெயில் பாதையில் காட்டெருமைகள் உலா வந்ததால் மலை ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
கூட்டமாக நின்ற காட்டெருமைகள்
மேட்டுப்பாளையம் -ஊட்டி இடையே ஒரு ரெயிலும், குன்னூர் -ஊட்டி இடையே 3 மலை ரெயில்களும் என மொத்தம் 4 மலை ெரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த 4 மலை ரெயில்களும் மீண்டும் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கும், குன்னூருக்கும் இயக்கம்படுகின்றன மலை ரெயில் பாதை மலைகளை குடைந்து அமைக்கப்பட்டுள்ளதால் ரெயில்களின் பாதுகாப்பு கருதி வேகம் குறைவாக இயக்கப்படுவது வழக்கமாக உள்ளது. மலை ரெயில்கள் சராசரியாக 13 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை குன்னூரில் இருந்து வழக்கமாக ஊட்டிக்கு மலை ரயில் புறப்பட்டது. ரெயில் வெலிங்டன் ரெயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு வந்து கொண்டு இருந்தது. அப்போது 60 அடி பாலத்தை அடுத்த மேம்பாலப் பகுதியில் சுற்றுலா பயணிகளுடன் மலை ரெயில் வந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு வளைவில் 25-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் மலை ரெயில் பாதையில் உலா வந்ததோடு கூட்டமாக நின்றிருந்தன.
15 நிமிடம் தாமதம்
இதனைக் கண்ட மலை ரெயில் ஓட்டுனர் பிரேக்ஸ்மேன் கணேசன் சாதுர்யமாக செயல்பட்டு உடனடியாக லோகோ பைலட்டிற்கு சிக்னல் கொடுத்து மலை ரெயிலை நிறுத்தினார். பின்னர் அவரே ரெயிலில் இருந்து இறங்கி வந்து அந்த காட்டெருமைகள் கூட்டத்தை அங்கிருந்து விரட்டும் முயற்சியில் ஈடுபட்டார்.
சிறிது நேரத்திற்கு பின் காட்டெருமைகள் தானாகவே வனப்பகுதிக்குள் சென்றன. இதையடுத்து 15 நிமிடத்திற்கு பின் சுற்றுலாப் பயணிகளுடன் மலை ெரயில் அங்கிருந்து ஊட்டிக்கு புறப்பட்டுச் சென்றது.
தண்டவாளத்தில் நின்ற காட்டெருமைகள் மீது மலை ரெயில் மோதாமல் இருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.