1 மாதமாக வீட்டுக்கே செல்லாமல் இருந்த பாஜக பிரமுகர் வெட்டி படுகொலை..!


1 மாதமாக வீட்டுக்கே செல்லாமல் இருந்த பாஜக பிரமுகர் வெட்டி படுகொலை..!
x

திருப்பத்தூர் நகரபகுதி பாஜக துணை தலைவர் கலிகண்ணன், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஊத்தங்கரை,

திருப்பத்தூர் நகரபகுதி பாஜக துணை தலைவராக பதவியில் இருந்தவர் கலிகண்ணன். இவர் இன்று காலை கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத வேப்பாலம்பட்டி பகுதியில் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் ஊத்தங்கரை போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவ இடத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் தலைமையில் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுனர். எப்போது?, எதற்காக? இந்த கொலை நடைப்பெற்றது, கொலையாளிகள் யார் என்ற விசாரணையில் காவல்துறையினர் ஈடுப்பட்டுள்ளனர்.

கடந்த ஒருமாத காலமாக சொந்த ஊர் செல்லாமல் ஊத்தங்கரையில் தங்கி இருந்த கலிகண்ணன் வெட்டி படுகொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story