தருமபுரி, தடங்கம் பகுதியில் ஜல்லிக்கட்டு மாடு முட்டி சிறுவன் உயிரிழப்பு


தருமபுரி, தடங்கம் பகுதியில் ஜல்லிக்கட்டு மாடு முட்டி சிறுவன் உயிரிழப்பு
x
தினத்தந்தி 21 Jan 2023 7:24 PM IST (Updated: 21 Jan 2023 7:33 PM IST)
t-max-icont-min-icon

தருமபுரி, தடங்கம் பகுதியில் ஜல்லிக்கட்டு மாடு முட்டியதில் 15 வயது சிறுவன் உயிரிழந்தார்.

தருமபுரி,

தருமபுரி அருகே தடங்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் மூன்றாம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாவட்ட ஆட்சித்தலைவர் உறுதிமொழி வாசிக்க மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த விழாவில் 700 காளைகளும் 500 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் 7-வது சுற்று முடிவில் மாடுகள் வெளி வரும் வழியில் ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த கோகுல் என்ற 15 வயது சிறுவனை மாடு முட்டியதில் படுகாயம் அடைந்தார்.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவன் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story