பஸ் சக்கரத்தில் சிக்கி சிறுவன் பலி


பஸ் சக்கரத்தில் சிக்கி சிறுவன் பலி
x

பஸ் சக்கரத்தில் சிக்கி சிறுவன் பலி

கோயம்புத்தூர்

கோவை

கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் மணி. இவரது மகன் சரண் (வயது 10). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் சரண் அந்த பகுதியை சேர்ந்த ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிள் சிங்காநல்லூர் காமராஜர் ரோட்டில் வந்த போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் கீழே விழுந்த சரண் மீது அந்த வழியாக வந்த தனியார் பஸ்சின் சக்கரம் சிறுவன் மீது ஏறியது.

பஸ் சக்கரத்தில் சிக்கிய சிறுவன் படுகாயமடைந்தார். உடனே அக்கம், பக்கத்தினர் அந்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுவனை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த விபத்து குறித்து கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Related Tags :
Next Story