சிறுமியை காதலிக்க வற்புறுத்தி மிரட்டிய வாலிபர் போக்சோவில் கைது


சிறுமியை காதலிக்க வற்புறுத்தி மிரட்டிய வாலிபர் போக்சோவில் கைது
x

சிறுமியை காதலிக்க வற்புறுத்தி மிரட்டிய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர் ஸ்டாலின் (வயது 21). இவர் 16 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் ஸ்டாலினின் தாயாரை சந்தித்து அவரது மகனை கண்டிக்குமாறு கூறியுள்ளனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியிலிருந்து சைக்கிளில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சிறுமியை ஸ்டாலின் வழிமறித்து காதலிக்க வற்புறுத்தி மிரட்டியுள்ளார். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி போக்சோவில் வழக்குப்பதிவு செய்து ஸ்டாலினை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story