சிறுமிக்கு கட்டாய தாலி கட்டிய வாலிபர் போக்சோவில் கைது


சிறுமிக்கு கட்டாய தாலி கட்டிய வாலிபர் போக்சோவில் கைது
x

சிறுமிக்கு கட்டாய தாலி கட்டிய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

திருச்சி

முசிறி:

முசிறியை அடுத்த தொட்டியம் பாலசமுத்திரம் கார்த்திகைபட்டி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் கார்த்திக்(வயது 24). இவர், ஒரு சிறுமியை வலுக்கட்டாயமாக தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு கூட்டிச்சென்று, தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், பின்னர் சிறுமியை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு, கடைக்குச் சென்று மஞ்சள்கயிறு வாங்கி வந்து, சிறுமிக்கு கட்டாய தாலி கட்டியதாகவும் முசிறி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் காவேரி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தார்.


Next Story