குடிநீர் குழாயில் உடைப்பு


குடிநீர் குழாயில் உடைப்பு
x
தினத்தந்தி 14 Dec 2022 12:15 AM IST (Updated: 14 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது.

சிவகங்கை

காளையார்கோவில்,

காளையார் கோவிலில் இருந்து பரமக்குடி செல்லும் சாலையில் போலீஸ் நிலையம் பஸ் நிறுத்தம் அருகில் காவிரி கூட்டு குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 2 நாட்களாக தண்ணீர் வீணாகி சாலையில் ஓடுகிறது. இந்த தண்ணீர் அப்பகுதியில் குண்டும், குழியுமாக உள்ள சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அவ்வழியே செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

1 More update

Next Story