கிணற்றில் விழுந்த எருமை மாடு உயிருடன் மீட்பு


கிணற்றில் விழுந்த எருமை மாடு உயிருடன் மீட்பு
x

கிணற்றில் விழுந்த எருமை மாடு உயிருடன் மீட்கப்பட்டது.

கரூர்

கரூர் மாவட்டம், தவிட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மதியழகன் (வயது 63). இவர் தனது வீட்டுக்கு அருகில் இருந்த வெற்று இடத்தில் முளைத்திருந்த புற்களில் எருமை மாட்டை மேய விட்டிருந்தார். அந்த வெற்றிடத்தில் தரை மட்டத்திற்கு வட்டை கிணறு ஒன்று உள்ளது. இந்நிலையில் வட்டை கிணறு அருகே மேய்ந்து கொண்டிருந்த ரூ.40 ஆயிரம் மதிப்பிலான எருமை மாடு திடீரென தவறி கிணற்றுக்குள் விழுந்தது. இதை பார்த்த மதியழகன் மற்றும் அவரது குடும்பத்தினர் அக்கம் பக்கத்தினரை அழைத்து கிணற்றுக்குள் விழுந்த எருமை மாட்டை மீட்க முயற்சி செய்தனர். இருப்பினும் முடியவில்லை. பின்னர் இதுகுறித்து மதியழகன் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து வந்து எருமை மாட்டை கயிற்றைக் கட்டி லாபகரமாக மேலே தூக்கி உயிருடன் மீட்டு மதியழகனிடம் ஒப்படைத்தனர்.


Next Story