மர்மமான முறையில் இறந்து கிடந்த காட்டெருமை


மர்மமான முறையில் இறந்து கிடந்த காட்டெருமை
x

மர்மமான முறையில் காட்டெருமை இறந்து கிடந்தது.

திருச்சி

துவரங்குறிச்சி:

துவரங்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மலைகளில் காட்டெருமைகள் அதிகளவில் உள்ளன. இந்நிலையில் துவரங்குறிச்சி அருகே உள்ள சீகம்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் நேற்று காலை ஒரு வயதுள்ள காட்டெருமை மர்மமான முறையில் செத்துக்கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த வனத்துறையினர் விசாரணை நடத்தினர். காட்டெருமைகள் ஒன்றோடொன்று சண்டையிட்டதில் உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. பின்னர் கால்நடை மருத்துவர்களை வரவழைத்து சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அங்கேயே காட்டெருமையின் உடல் குழி தோண்டி புதைக்கப்பட்டது.

1 More update

Next Story