எருது விடும் விழாவில் வீட்டுக்குள் புகுந்து முட்டிய காளை


எருது விடும் விழாவில் வீட்டுக்குள் புகுந்து முட்டிய காளை
x

எருதுவிடும் விழாவில் பார்வையாளரை வீட்டுக்குள் புகுந்து காளை முட்டியது. மேலும் போட்டியில் பாய்ந்து ஓடிய காளை ஒன்று தவறி விழுந்து பலியானது.

வேலூர்,

வேலூர் மாவட்டம் கோவிந்தரெட்டிபாளையத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி எருது விடும் விழா நேற்று நடந்தது.

இதில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 154 காளைகள் பங்கேற்றன. காலை 10 மணி அளவில் காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சீறி பாய்ந்து ஓடிய காளைகளை இளைஞர்கள் ஆரவாரம் செய்து ரசித்தனர்.

தவறி விழுந்து காளை பலி

அப்போது ஒரு காளை பார்வையாளர் ஒருவரை வீடுபுகுந்து முட்டியது. மாடுகள் முட்டியதில் 7 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

இந்த விழாவில் பங்கேற்ற அதே கிராமத்தை சேர்ந்த ராமு என்பவரின் பாகுபலி என்று அழைக்கப்படும் காளை, வீதியை தாண்டி சென்றபோது நிலைத்தடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

அதைத்தொடர்ந்து அந்த காளைக்கு அதன் உரிமையாளர் மற்றும் அவரது உறவினர்கள் மனிதர்களுக்கு செய்வது போல இறுதி சடங்கு செய்து அடக்கம் செய்தனர்.


Next Story