மக்களைதேடி மனுக்கள்பெறும் முகாம்


மக்களைதேடி மனுக்கள்பெறும் முகாம்
x
தினத்தந்தி 3 July 2023 12:15 AM IST (Updated: 3 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் மக்களைதேடி மனுக்கள் பெறும் முகாம்

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்

ரிஷிவந்தியம் ஒன்றியத்துக்குட்பட்ட மரூர் ஊராட்சியில் மக்களை தேடி மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது. இதற்கு ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினரும், கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான வசந்தம் கார்த்திகேயன், மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். வேளாண் இணை இயக்குனர் கருணாநிதி, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் துரைமுருகன் வரவேற்றார்.

கூட்டத்தில் கலெக்டர் ஷ்ரவன்குமார் பேசும்போது, கிராமப்புற ஏழை, எளிய மக்களின் நலன் கருதி உங்களின் இருப்பிடத்துக்கே நேரில் வந்து மனுக்கள் பெறப்படுகிறது. அரசு விதிமுறைகளுக்குட்பட்டு தகுதி வாய்ந்த கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்படும். நிராகரிக்கப்பட்ட மனுக்களுக்கான காரணம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படும். தீர்வு காணப்படும் மனுக்களுக்கு விரைவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்றார். இதேபோல் அத்தியூர், இளையனார்குப்பம் ஊராட்சிகளிலும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. 3 ஊராட்சிகளில் 18 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாணவ, மாணவிகளிடமிருந்து 2,511 மனுக்கள் பெறப்பட்டன. நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், பாரதிதாசன், ஒன்றியக்குழு தலைவர்கள் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன், தாசில்தார் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரங்கராஜன், பன்னீர்செல்வம் மற்றும் ஊராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story