மெழுகுவர்த்தி ஏந்தி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்


மெழுகுவர்த்தி ஏந்தி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
x

மெழுகுவர்த்தி ஏந்தி காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர்

மணிப்பூர் மாநில மக்களை பிளவுபடுத்திய மத்திய அரசை கண்டித்தும், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தவறிய மணிப்பூர் பா.ஜ.க. அரசை கண்டித்தும், மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்கக்கோரியும் நேற்று கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தெற்கு மாநகர தலைவர் வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கினார். இதில் வடக்கு மாநகர தலைவரும், மாநகராட்சி கவுன்சிலருமான ஸ்டீபன் பாபு உள்பட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு பா.ஜ.க. அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story