மெழுகுவர்த்தி ஏந்தி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
முதுகுளத்தூரில் மெழுகுவர்த்தி ஏந்தி காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் பஸ் நிலையம் அருகே மணிப்பூர் கலவரம் மற்றும் வன்கொடுமையை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முதுகுளத்தூர் வட்டார தலைவர் ராமர் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் பூவலிங்கம், வட்டார தலைவர்கள் புவனேஸ்வரன், சுரேஷ் காந்தி, கமுதி பழக்கடை ஆதி, அப்துல் சத்தார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் சாகுல் ஹமீது அனைவரையும் வரவேற்றார். இதில் மணிப்பூர் கலவரத்தின் போது ஏற்பட்ட பாலியல் வன்கொடுமையை தடுக்காத மணிப்பூர் மாநில அரசையும், மத்திய அரசையும் கண்டித்தும் காங்கிரஸ் கட்சி சார்பில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கோஷமிட்டனர். இதில் நகரச் செயலாளர் சஞ்சய் காந்தி, காங்கிரஸ் நிர்வாகிகள் சிதம்பரம், போஸ், ராம பாண்டி, ஜான், செல்லச்சாமி, ராஜபாண்டி மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.