பூந்தமல்லி: கொட்டும் மழையில் தீப்பிடித்து எரிந்த கார் - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி


பூந்தமல்லி: கொட்டும் மழையில் தீப்பிடித்து எரிந்த கார் - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
x

பூந்தமல்லி அருகே கொட்டும் மழையில் சாலையில் சென்ற கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை

பூந்தமல்லி:

பூந்தமல்லி அடுத்த இருளப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நவநீத் சிங் (வயது 30). இவர் செம்பரம்பாக்கத்தில் உள்ள சிப்காட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இன்று மதியம் பூந்தமல்லி நோக்கி கம்பெனிக்கு சொந்தமான காரில் சென்று கொண்டிருந்தார்.

பூந்தமல்லி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, செம்பரம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த நவநீத் சிங் காரை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி பார்ப்பதற்குள் கார் முன் பகுதி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தீப்பிடி எரிந்து கொண்டிருந்த காரை அனைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளும் தீயை அணைக்கு முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அப்போது கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்த வேலையிலும் கார் அணையாமல் எரிந்து கொண்டே இருந்தது.

இதையடுத்து தீயணைப்பு போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறியும் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் காரில் எரிந்து கொண்டிருக்கும் தீயை அனைத்தனர். கொட்டும் மழையிலும் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


Next Story