பஸ் மீது கார் மோதி விபத்து


பஸ் மீது கார் மோதி விபத்து
x
தினத்தந்தி 22 July 2023 12:31 AM IST (Updated: 23 July 2023 3:16 PM IST)
t-max-icont-min-icon

சோளிங்கர் அருகே பஸ் மீது கார் மோதிய விபத்தில் கார் டிரைவர் உள்பட 11 பேர் காயமடைந்தனர்.

ராணிப்பேட்டை

பஸ் மீது கார் மோதல்

பெங்களூருவை சேர்ந்தவர் கஜேந்திரன். இவர் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு நேற்று காலை காரில் சென்று கொண்டிருந்தார். சோளிங்கரை அடுத்த பாராஞ்சி கிராமத்தை அடுத்த கருங்கல் சிலுவை மலை அருகே சென்றபோது அரக்கோணத்தில் இருந்து சோளிங்கருக்கு அரசு விரைவு பஸ் வந்து கொண்டிருந்தது.

அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே வந்த பஸ் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் காரின் முன் பகுதி நொறுங்கியது. பஸ் அருகில் இருந்த முட்புதருக்குள் சென்று நின்றது.

11 பேர் காயம்

காரை ஓட்டிவந்த கஜேந்திரன் படுகாயமடைந்தார். அவரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பஸ்சில் பயணம் செய்த பாராஞ்சி கிராமத்தை சேர்ந்த பரிமளா உள்பட 10 பேர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர்.

இதுகுறித்து சோளிங்கர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.


Next Story