மோட்டார் சைக்கிள்-வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதிய கார்; ஒருவர் பலி


மோட்டார் சைக்கிள்-வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதிய கார்; ஒருவர் பலி
x

மோட்டார் சைக்கிள்-வாகனங்கள் மீது அடுத்தடுத்து கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.

பெரம்பலூர்

அடுத்தடுத்து மோதிய கார்

பெரம்பலூரில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நள்ளிரவு ஒரு மோட்டார் சைக்கிள் சென்றது. அந்த மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணம் செய்தனர். அப்போது பின்னால் வந்த கார் திடீெரன அந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதையடுத்து டிைரவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் மைய தடுப்புச்சுவரை தாண்டி மறுபக்க சாலைக்கு சென்று, எதிரே வந்த 2 கார்கள் மீது மோதியது. மேலும் தொடர்ந்து ஓடிய கார் எதிரே வந்த வேன் மீது மோதி, அதன் அடியில் சிக்கியது. இதில் அந்த வேன் கவிழ்ந்தது.

சாவு

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த ஒருவர் பரிதாபமாக இறந்தார். மேலும் மோட்டார் சைக்கிள், வேன், கார்களில் பயணம் செய்த அய்யப்ப பக்தர்கள் உள்பட மொத்தம் 20 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அய்யோ... அம்மா... என்ற அலறியதோடு, காப்பாற்றுமாறு அபய குரல் எழுப்பினர். அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் இந்த விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் அந்த வழியாக வந்த பெரம்பலூர் நெடுஞ்சாலை ரோந்து போலீசார், விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காகவும், இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்காகவும் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதற்கிடையே இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார், வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டு, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இந்த விபத்தில் இறந்தவர் மற்றும் காயமடைந் தவர்கள் பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை. இது குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் நடந்த இந்த விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story