மின்கம்பம் மீது கார் மோதியது
மின்கம்பம் மீது கார் மோதியது
நீலகிரி
கூடலூர்
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் இருந்து கூடலூர் வழியாக ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. அவர்கள் ஊட்டிக்கு சென்று விட்டு மீண்டும் தங்களது ஊர்களுக்கு நேற்று முன்தினம் மாலை முதல் சென்று வருகின்றனர். இந்த நிலையில் கேரள பதிவு எண் கொண்ட கார் ஒன்று ஊட்டியில் இருந்து வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் சாலையோரம் இருந்த மின் கம்பத்தின் மீது மோதியது. இதில் மின்கம்பம் மட்டுமின்றி அப்பகுதியில் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளும் சேதமடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் மின்கம்பத்தில் மோதிய கார் பத்திரமாக மீட்கப்பட்டு அங்கிருந்து அகற்றப்பட்டது. இந்த விபத்தில் காருக்குள் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்ைல.
Related Tags :
Next Story